Monday, February 2, 2026
HomeMain NewsAmericaஇந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன் - மீண்டும் டிரம்ப்

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன் – மீண்டும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.

நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

இரு நாடுகளும் சண்டையிட்டால், வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினேன்.

அணுசக்திப் போரைத் தடுத்தேன்” என்றார்.

கடந்த மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

டிரம்ப் இதனை அறிவித்து, தானே மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார்.

ஆனால், இந்தியா இந்த கூற்றை மறுத்தது.

இருப்பினும் டிரம்ப் 18வது முறையாக இவ்வாறு பேசியுள்ளார் என காங்கிரஸ் மத்திய அரசை விமர்சித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular