Monday, February 2, 2026
HomeMain NewsAmericaபனிக்குள் மூடப்பட்ட அட்டகாமா – வானிலை மாற்றத்தின் விளைவு?

பனிக்குள் மூடப்பட்ட அட்டகாமா – வானிலை மாற்றத்தின் விளைவு?

உலகின் மிக வறண்ட பாலைவனமாக அட்டகாமா (Atacama Desert) பாலைவனம் காணப்படுகின்றது.

இது தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் அமைந்துள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக ஒரு மில்லிமீற்றருக்கும் குறைவாகவே மழை பெய்யும் இந்த பாலைவனத்தில் பனி அல்லது பனிக்கட்டி காணப்படும் நிலை மிகவும் அபூர்வமான ஒன்று.

இந்தநிலையில் குறித்த பாலைவனத்தில் திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அட்டகாமா பாலைவனத்தில் பல வருடங்களாக மழை பெய்ததற்கான எந்தப் பதிவும் இல்லாத நிலையில், தற்போது வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனி படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த அரிய நிகழ்வுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட அசாதாரண வானிலை மாற்றங்களே இந்த பனிப்பொழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular