Monday, February 2, 2026
HomeMain NewsIndiaவெப்பம் தொடர்பான இறப்புகள் இரட்டிப்பாகும்

வெப்பம் தொடர்பான இறப்புகள் இரட்டிப்பாகும்

2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வெப்பம் தொடர்பான இறப்புகள் இரட்டிப்பாகும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, ஆண்டுக்கு ஒரு 144,000ல் இருந்து 328,500ஆக இறப்புகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லி, சென்னை, சூரத், லக்னோ உள்ளிட்ட நகரங்கள் அதிக வெப்ப அலை மற்றும் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை தடுப்பதற்கு 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும், இதற்கு 2.4 டிரில்லியன் டொலர் முதலீடு தேவைப்படும் எனவும் உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும், இது 2070 ஆம் ஆண்டுக்குள் 14 முதல் 30 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular