Monday, February 2, 2026
HomeHealthஇளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது- ஏன் தெரியுமா?

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது- ஏன் தெரியுமா?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். இது சுத்தமான சுவையான பானம் ஆகும். இளநீரில் செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன.

அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தை தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச்சத்து குறையும் நிலையில் அதை சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களை குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்பு தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு மூலம் செலுத்தலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன்படுத்த ப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரை சத்துடன் தாது பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத்தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular