ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநருமான செர்ஜியோ கோரை அமெரிக்க இன்று பிற்பகல் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது , வர்த்தகம், , சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டன.
மேலும் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், மக்களின் எதிர்காலத்திற்கான வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உட்பட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்தார்.
