2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் நிதியமைச்சர் என்ற முறையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர்
5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles