Monday, February 2, 2026
HomeCinemaகமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நாயகன் திரைப்படம் ரீ ரிலீஸ்- படக்குழு அறிவிப்பு

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நாயகன் திரைப்படம் ரீ ரிலீஸ்- படக்குழு அறிவிப்பு

கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கினார். படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ்நாட்டில் 214 நாட்கள் ஓடியது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ திரைப்படத்தை வரும் நவம்பர் 6-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular