Monday, February 2, 2026
HomeMain NewsEuropeபிரேசிலில் சோகம்: பஸ் கவிழ்ந்து 17 சுற்றுலா பயணிகள் பலி

பிரேசிலில் சோகம்: பஸ் கவிழ்ந்து 17 சுற்றுலா பயணிகள் பலி

பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரம் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் 30 பேர் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

சலோவா நகர் அருகே சென்றபோது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி பஸ் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சுற்றுலா சென்ற பயணிகள் 17 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular