Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaதையிட்டிக்கு சென்றார் நயினாதீவு விகாராதிபதி

தையிட்டிக்கு சென்றார் நயினாதீவு விகாராதிபதி

நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள்  இன்று வெள்ளிக்கிழமை தையிட்டிக்கு சென்றனர்.

அங்கு சென்ற பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள், பொது மக்களுடன் கலந்துரையாடினர்.

தையிட்டி திஸ்ஸ விகாரை பொதுமக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ளது என்று கூறி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில்,  நாளைய தினமும் போராட்டம் ஒன்று அங்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே நயினாதீவு விகாராதிபதி தலைமையிலான குழுவினர்  இன்று அங்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular