Monday, February 2, 2026
HomeMain Newsதிஸ்ஸ விகாரைக்கு எதிராக தையிட்டியில் மாபெரும் போராட்டம்

திஸ்ஸ விகாரைக்கு எதிராக தையிட்டியில் மாபெரும் போராட்டம்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாகத் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை முன்பாக நேற்று  மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மதத் தலைவர்கள்,  சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்  மற்றும் பொதுமக்கள் எனப் பெருமள விலானோர் கலந்துகொண்டு தையிட்டி  திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், காணிகளை விடுவிக்கக் கோரியும் விண்ணதிரக்  கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து பொலிஸார் பெருமளவில் பஸ்களில் அழைத்து வரப்பட்டு அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இதேவேளை, தையிட்டி விகாரையில் இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புதிதாக புத்த சிலை ஒன்றை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டுவரப்பட்டது.

இந்நிழைலயில் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரைக் காங்கேசன்துறை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் அவர்களை தையிட்டிக்கு செல்லவிடாது பஸ்ஸில் திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular