Monday, February 2, 2026
HomeMain Newsமன்னார்- பேசாலை கடலில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

மன்னார்- பேசாலை கடலில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

மன்னார் – பேசாலை பகுதியிலுள்ள கடலில் நீராடச்சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

இருவர் சம்பவ இடத்திலிருந்த ஒரு குழுவினரால் மீட்கப்பட்டு மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடலில் மூழ்கி உயிரிழந்தவர்கள் பேசாலை பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular