Monday, February 2, 2026
HomeMain Newsஜேர்மனியில் கடும் பனிப்பொழிவினால் வாகன விபத்து - மூவர் பலி!

ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவினால் வாகன விபத்து – மூவர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டின் பெடர்போர்ன் நகரில் பெலிபீல்ட் அருகே மார்ஷ்பெல் – லிட்ச்னா வீதி சந்திப்பில் நேற்று வாகன விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து கார்கள், பைக்குகள், லொறிகள் என பல்வேறு வாகனங்கள் மோதின. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். கடும் பனிப்பொழிவு, வெளிச்சமின்மை , பனிப்பொழிவால் வீதியில் வாகனங்கள் பிரேக் செயல்படாமல் வழுக்கி செல்லுதல் காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular