கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் பிரிவின் விளாவோடை பகுதியில் வெடிக்காத நிலையில் இரண்டு குண்டுகள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.
விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். பின்னர் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் குறித்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் குறித்த குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
