தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றைய தினம் கொட்டும் மழையிலும் போராட்டம் நடைபெற்றது.
மக்களின் காணிகளை பிடித்து அடாத்தாக அமைக்கப்பட்ட அந்த விகாரையை அகற்ற வேண்டும். மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் அதற்கு முதல் நாளிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையும் நேற்று காலை முதல் மாலை வரையும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய தினம் கொட்டும் மழையில் நனைந்தவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
போராட்ட இடத்தில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
