யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டது T-20 உலகக் கிண்ணம்

இருபது – 20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இலங்கை, இந்தியா இணைந்து இந்த ஆண்டு இருபது – 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை நடத்துகின்றன. இந்த உலகக் கிண்ணம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலகக் கிண்ணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்துக்கு எடுத்து வரப்பட்டது.

வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களை தொடர்ந்து நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது. பண்பாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து அங்கு உலகக்கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நல்லூர் ஆலய முன்றல், துரையப்பா பொது விளையாட்டரங்கம், யாழ். கோட்டை, யாழ். பொதுநூலகம் ஆகிய இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. ஏராளமான மக்கள் திரண்டு உலகக் கிண்ணத்தை பார்வையிட்டதுடன், ஒளிப்படங்களும் எடுத்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles