ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது டாக்கா நீதிமன்றம்

அரசு வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 7,200 சதுர அடி கொண்ட இரண்டு மனைகள் ஒதுக்கியதில் விதிகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா, அவரது மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், மருமகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரபியுல் ஆலம் இன்று தீர்ப்பளித்தார்.

இரண்டு நிலங்கள் ஒதுக்கப்பட்டது தொடர்பான இரண்டு தனித்தனி வழக்குகளிலும் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரத்வான் முஜிப் சித்திக், அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு இரண்டு வழக்கிலும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சரணடைந்த ஒரே குற்றவாளியான முகமது குர்ஷித் ஆலமுக்கு தலா ஓர் ஆண்டு என இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles