அமெரிக்காவின், வாஷிங்டனில் உள்ள பராளுமன்றத்துக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இளைஞர் துப்பாக்கியுடன் நுழைய முற்படுவதை பார்த்த பொலிஸார் அவரை சுற்றி வளைத்ததோடு, ஆயுதத்தை கீழே போடும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, குறித்த இளைஞர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டார்.
அவர் வெடி மருந்துகளையும் வைத்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பராளுமன்ற வளாகம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தையும் பொலிஸார் சோதனை செய்ததில் எரிவாயு, முகமூடி, ஹெல்மட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த இளைஞர் எதற்காக துப்பாக்கியுடன் வந்தார் என்பது தொடர்பில் பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
