ஜப்பானை தாக்கிய டொல்பின் புயல் காரணமாக சுமார் 56,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதேநேரம் குறித்த புயலினால் 05 பேர் வரை காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த புயலானது இன்று கிழக்கு கடற்கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா நீர்வழிப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒகினாவாவில் உள்ள குமே தீவிலிருந்து சுமார் 160 கி.மீ (99 மைல்) வடமேற்கில் புயல் இருந்ததாகவும், அது மணிக்கு 15 கி.மீ (9 மைல்) வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
புயலின்போது அதிகபட்சமாக மணிக்கு 162 கி.மீ (89.5 மைல்) வேகத்தில் தொடர்ச்சியான காற்று வீசியதுடன், காற்றின் வேகம் மணிக்கு 216 கி.மீ வரை எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பானில், ஒகினாவா (Okinawa) மற்றும் ககோஷிமா (Kagoshima) மாகாணத்தில் உள்ள அமாமி (Amami ) தீவு ஆகியவை முக்கியமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளாகும்.
