ஆவணமற்ற மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் மத்தியில் மலேரியா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகத் மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு மே மாத தொடக்கத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 13 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 11 பேர் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் இருவர் ஆவணப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் என்றும் அத்துறை கூறியது.
நோய்ப்பரவல் ஆய்வுகளின்படி, அவர்கள் வெளிநாட்டில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், இந்த 13 நோயாளிகளும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த 13 பாதிப்புகளும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, நோய்த்தொற்று பரவும் சங்கிலி உடைக்கப்பட்டதால், உள்ளூர்வாசிகள் யாரும் மலேரியாவால் பாதிக்கப்படவில்லை என்று அது ஒரு அறிக்கையில் கூறியது.ஷ
மலேரியா பாதிப்புகள் குறித்து சுகாதாரப் பணியாளர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி, ஜூன் 3 அன்று ஒரு உள் சுற்றறிக்கையை வெளியிட்டதையும் அத்துறை உறுதிப்படுத்தியது.
பாதிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டன; நோயாளிகள் சுகாதார நிலையங்களில் கண்காணிக்கப்பட்டனர் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அது மேலும் கூறியது!
