செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் அதிகரிக்கும் வேளையில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளச் சிரமப்படுவதாகப் புதிய அறிக்கை ஒன்று சொல்கிறது.
NTUC கற்றல் நடுவம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நடைமுறைகளைச் செயல்படுத்துதிலும் நிறுவனங்கள் சவால்களை எதிர்நோக்குவதாக அறிக்கை குறிப்பிட்டது.
ஆய்வில் கலந்துகொண்ட கால்வாசி முதலாளிகள் அன்றாடப் பணிகளில் சுயமாகச் செயல்படும் AI பயன்படுத்தப்படுகிறது; வேலைப் பொறுப்புகளும் அதைப் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளனர்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வேலைகளில் உள்ளவர்களுக்கு அதற்கான திறன்கள் இல்லாமல் போவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
எனினும் தொழில்நுட்பத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் இறுதி முடிவை எடுப்பது மனிதர்களாக இருக்கவேண்டும் என்று வணிகத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
