வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று காலை நாகர்கோவில் வடக்கு பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஒரு கிலோ 750 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கேரளக் கஞ்சாவுடன் மருதங்கேணி பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.

















