செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி கிடைத்தது

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.

இதனால், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிய வருகிறது. முன்னதாக செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டமையால் அகழ்வுக்கான திகதி குறிப்பிடப்படாமல் இது குறித்த வழக்கு தவணையிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்போது அகழ்வுக்கான திகதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles