ஒஸ்கர் விருது விழா – சிறந்த படம் உட்பட 6 விருதுகளை அள்ளிய ‘One Battle After Another’!

அமெரிக்​கா​வின் லொஸ் ஏஞ்​சல்​ஸில் 98ஆவது ஒஸ்கர் விருது விழா கோலாகல​மாக இலங்கை நேரப்படி இன்று காலை நடைபெற்றது. உலகம் முழு​வதும் உள்ள திரைக்​ கலைஞர்கள் இந்த விருது அறி​விப்​பை​யும் விழாவை​யும் ஆவலுடன் எதிர்​நோக்கி இருந்தனர். இந்த விழாவில் ஒஸ்கர் விருதை வென்றவர்கள் குறித்து பார்ப்போம்.

இதில் ரியான் கூக்​லர் இயக்​கிய ஹாலிவுட் படமான ‘சின்​னர்​ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்​துரைகளைப் பெற்று சாதனைப் படைத்தது. இதன் மூலம் அகாடமி விருது வரலாற்​றில் அதிக பரிந்​துரைகளைப் பெற்​ற​தாக இப்​படம் மாறி​யுள்​ளது. இதற்கு முன்பு ஒஸ்கர் வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு படம் 14 பிரிவு பரிந்துரைகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘ஆல் அபவுட் ஈவ்’ (1950), ‘டைட்​டானிக்’ (1997), ‘லா லா லேண்ட்​’ (2016) ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

98ஆவது ஒஸ்கர் விருது வெற்றியாளர்கள் யார் யார்?

* சிறந்த படம் – வன் பற்றில் ஆஃப்டர் எனதர் (One Battle After Another)

* சிறந்த நடிகர் – மைக்கேல் பி ஜோர்டான் – படம்: சின்னர்ஸ்

* சிறந்த துணை நடிகர் – ஷான் பென் – படம்: வன் பற்றில் ஆஃப்டர் எனதர்

* சிறந்த நடிகை – ஜெஸ்ஸி பக்லி – படம்: ஹேம்நெட்

* சிறந்த துணை நடிகை – ஏமி மடிகன் – படம்: வெப்பன்ஸ்

* சிறந்த இயக்குநர் – பால் தாமஸ் ஆண்டர்சன் – படம்: வன் பற்றில் ஆஃப்டர் எனதர்

* சிறந்த அனிமேஷன் படம் – கே.பாப் டிமன் ஹன்டர்ஸ்

* சிறந்த அனிமேஷன் குறும்படம் – The Girl Who Cried Pearsl

* சிறந்த கேஸ்ட்டிங் – காசண்ட்ரா குலுகுண்டிஸ் – படம்: வன் பற்றில் ஆஃப்டர் எனதர்

* சிறந்த ஒளிப்பதிவு – ஆட்டம் டுரால்ட் ஆர்காபா – படம்: சின்னர்ஸ்

* சிறந்த ஆடை வடிவமைப்பு – கேட் ஹாவ்லி – படம்: ஃபிராங்கன்ஸ்டைன்

* சிறந்த ஆவணப்படம் – Mr. Nobody Against Putin

* சிறந்த ஆவண குறும்படம் – All The Empty Rooms

* சிறந்த படத்தொகுப்பு – ஆண்டி ஜர்கென்சென் – படம்: வன் பற்றில் ஆஃப்டர் எனதர்

* சிறந்த சர்வதேச திரைப்படம் – சென்டிமென்டல் வேல்யூ

* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – தி சிங்கர்ஸ், Two People Exchanging Saliva

* சிறந்த ஒப்பனை – மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல், கிளியோனா – படம்: ஃபிராங்கன்ஸ்டைன்

* சிறந்த இசை: பேக்கிரவுண்ட் ஸ்கோர் – லூத்விக் கோரன்சன் – படம்: சின்னர்ஸ்

*சிறந்த இசை: ஒரிஜினல் பாடல் = கோல்டன் – கே.பாப் டிமான் ஹன்டர்ஸ்

* சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் – படம்: அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்

* சிறந்த திரைக்கதை – ரியான் கூக்லர் – படம்: சின்னர்ஸ்

* Adapted திரைக்கதை – பால் தாமஸ் ஆண்டர்சன் – படம்: வன் பற்றில் ஆஃப்டர் எனதர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles