குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் தலை; கணவர் கைது!

அஸ்ஸாம் மாநிலத்தில், திருமணமான பெண் கொலை செய்யப்பட்டு, அவரது தலை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைதாகியிருக்கிறார்.

குவகாத்தியின் பசிஸ்தபுரா பகுதியைச் சேர்ந்த ரியா தலுக்தர் என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், கொலைச் சம்பவம் மிகக் கொடூரமாக நடந்துள்ளது, பெண்ணின் தலை பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.

கைதாகியிருக்கும் அவரது கணவர் ராமானுஜன் கோஸ்வாமி, கொலையை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சுமார் 48 மணி நேரத்துக்கு முன்பு கொலை நடந்திருப்பதாகவும், ஆறு மாததங்களுக்கு முன்புதான் ரியா – ராமானுஜத்துக்கு திருமணமாகி, அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டு, பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ராமானுஜத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles