எரிமலை வெடிப்பால் சிங்கப்பூர் – இந்தோனேசியாவுக்கான 60 விமான சேவைகள் ரத்து

இந்தோனேசியாவின் எரிமலை வெடிப்பால் சிங்கப்பூருக்கும் ஜக்கர்த்தாவுக்கும் இடையிலான 60 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் சாங்கி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் நிலைமை சீராகவே இருந்தது.

பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு உதவுவதற்காக முனையம் 2இல் சிறப்பு உதவி முகப்பு அமைக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் 19 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கும் விடுதிகளுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்துச் செலவுகளை விமான நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக CNA அறிகிறது.

மாற்று விமானச் சேவைகள் பற்றிய மேலதி விவரங்களுக்கபக பயணிகள் காத்திருக்கின்றனர். இன்று அல்லது நாளைதான் பயணம் செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles