கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
