சிறுவர், சிறுமியர்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் ஆலய பின் வீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பெண்கள் அதிகமாகக் கலந்து கொண்டு தமது உரிமைகள், சிறுவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதன்போது ‘தமிழினத்தின் விழிப்பே விடுதலையின் முதற்படி’, ‘இராணுவமே வெளியேறு’, ‘போதைவாஸ்து பாவனைகளை கட்டுப்படுத்து’ உள்ளிட்ட வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
