கிழக்கு இந்தோனேசியாவில் இன்று (02) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இலங்கை எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள டெர்னாட் நகரின் கடற்கரைக்கு அப்பால், வடக்கு பகுதி கடலில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1,000 கிலோமீட்டர் தொலைவிற்குள் அபாயகரமான சுனாமி அலைகளை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடற்கரைகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
