தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 10 நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் நிலவும் சீரற்ற வானிலையினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 48 மணித்தியாலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் மாத்திரம் 26 பேர் பலியாகினர்.
கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளே இந்த உயிரிழப்புகளுக்குப் பிரதான காரணமாகும்.
எதிர்வரும் நாட்களிலும் ஆப்கானிஸ்தான் முழுவதும் மேலதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
