டிரோன் தாக்குதல் புகைப்படத்தை பகிர்ந்த பிரிட்டன் விமானப் பணிப்பெண் கைது

ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள கட்டிடம் சேதமடைந்துள்ளது.

இதை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்த 25 வயதுடைய பிரிட்டன் விமானப் பணிப்பெண் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தியின்படி, அந்தப் பெண் ஒரு வட்ஸ்அப் குழுவில் அப்புகைப்படத்தைப் பகிர்ந்து, விமான நிலையம் வழியாகச் செல்வது பாதுகாப்பானதா என்று சக ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் கடுமையான சைபர் கிரைம் சட்டங்களின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 54,000 டொலர் அபராதம் விதிக்கப்படும்.

இதற்கிடையில், பாதுகாப்பு தொடர்பான முக்கியமான காட்சிகளைப் படம்பிடிக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பிரிட்டன் தூதரகம் தங்களது நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles