கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலே எழுத்தாணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்திNயு அவர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியஇ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரஇ பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னஇ அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை அவர் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
