யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனலைதீவு பகுதியிலுள்ள காணி ஒன்றை, அந்த காணியின் உரிமையாளர் நேற்று சுத்தம் செய்துள்ளார். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த குறித்த கைக்குண்டும், துப்பாக்கியும் அவதானிக்கப்பட்டது. இது குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற ஊர்காவற்துறை பொலிஸார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
