ஈரானுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சு வரும் வெள்ளிக்கிழமைக்கு – ஏப்ரல் 24ஆம் திகதிக்கு முன்பாகத் தொடங்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார் என்று நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 36 முதல் 72 மணி நேரத்திற்குள் பேச்சு சாத்தியமாகலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்தனர் என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ட்ரம்பிடம் கேட்டபோது, அவர் ஒரு குறுஞ்செய்தியில் ‘அது சாத்தியம்’இ என்று பதிலளித்தார் என்றும் மேலும் கூறியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவதற்கு ஈரான் ஆட்சிக்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில் இன்று புதன்கிழமை மாலையுடன் காலாவதியாகவிருந்த போர் நிறுத்தத்தை நீடிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
