கனடாவில் பொலிஸாரின் கவனக் குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பலாலியை சேர்ந்த றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி (வயது -30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்ற றெஜிபோல்ட் திடீரென நிலைகுலைந்து விழுந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவரின் உடல்நிலையை ஆராயாமல் அவர் மதுபோதையில் இருந்தார் என்று தவறாகக் கருதி அவருக்கு முதலுதவி வழங்காமல் ‘குடிபோதையில் பொது இடத்தில் விழுந்து கிடந்தார்’, என்று கூறி அவருக்கு அபராத சீட்டை வழங்கினர். அதன் பின்னரே நோயாளர் காவு வண்டியை அழைத்துள்ளனர்.
மருத்துவமனையில், பொலிஸார் வழங்கிய தவறான தகவல் காரணமாக றெஜிபோல்ட்டுக்கு அவசரமாக சிகிச்சை வழங்கப்படவில்லை. பின்னரே, அவரின் நிலைகுலைவுக்கு மூளை இரத்தக் கசிவே காரணம் என்பது உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்து விட்டார்.
பொலிஸாரின் இந்தத் தவறான கணிப்புஇ ஒரு மனித உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. மரணத்தின் தறுவாயிலும் பிறருக்கு உதவும் நோக்கில்இ தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவர் இணங்கியிருந்தார். இதன் மூலம் தற்போது ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே அவர் கனடியப் பிரஜாவுரிமை பெற்றிருந்ததால்இ அவரிடம் கடவுச்சீட்டு இருக்கவில்லை. இதன் காரணமாக அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலோ அல்லது தாயகத்தில் உள்ள அவரpன் தாயாரைக் கனடாவுக்கு வரவழைப்பதிலோ பெரும் சட்டச் சிக்கல்கள் நீடிக்கின்றன.
பிரம்டன் மாநகர முதல்வர் பற்றிக் பிரவுண் மற்றும் பீல் பிராந்திய பொலிஸ் மா அதிபர் நிஷான் துரையப்பா ஆகியோர் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தும்இ ஒரு தமிழ் இளைஞருக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை எனக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அவரது உடல் பிரம்டனிலேயே வைக்கப்பட்டுள்ளது.
