வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடந்த நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியான தெய்வகுமார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
