மரதன் ஓட்டப் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த கென்ய வீரர்

லண்டனில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கென்ய வீரர் செபஸ்டியன் சாவே 1 மணி நேரம் 59 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் கென்யாவின் செபஸ்டியன் சாவே போட்டி தூரத்தை (42.2 கிமீ) முதலில் கடந்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 30 வினாடிகள் ஆகும். இது புதிய உலக சாதனையாகும். அதாவது மரதன் உலகில் 2 மணி நேரத்திற்கும் குறைவாக எந்த ஒரு வீரரும் போட்டி தூரத்தை கடந்தது இல்லை என்ற தடையை அவர் உடைத்துள்ளார்.

சாதனை குறித்து செபஸ்டியன் சாவே தெரிவித்துள்ளதாவது, பந்தய தூரத்தில் இலக்கை அடைந்த பின்னர் நேரத்தை பார்த்த பின் நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நாள் என்று கூறியுள்ளார்.

போட்டிக்கு முன்னதாக, நிருபர் ஒருவருக்கு பேட்டியளித்த செபஸ்டியன் சாவே, என்றாவது ஒருநாள் 2 மணி நேரத்திற்கு முன்னதாக போட்டியை கடக்கும் ஒரு நபராக நான் இருப்பேன் என்று கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles