‘எதிரியை இராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்; எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னரை சந்தித்த பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டுக்கு பிரிட்டன் மன்னர் சாள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா 4 நாள்கள் உத்தியோகபூர்வமாக சென்று இருக்கின்றனர்.
வாஷிங்டனில் இருவருக்கு அமெரிக்க இராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னர் சாள்;ஸ் மற்றும் அவரது மனைவிக்கு ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்பு அளித்தார்.
‘நாங்கள் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் எதிரியை இராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்.
அந்த எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த விடயத்தில் என்னை விடவும் பிரிட்டன் மன்னர் சாள்ஸ் திட்டவட்டமாக இருக்கிறார். எதிரியின் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.’ என ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
