பங்களாதேஷில் தட்டம்மை நோயின் பிடியில் சிக்கி மார்ச் மாதம் முதல் இதுவரை 259 பேர் தட்டம்மை அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில், 91 சதவீதம் பேர் 01 – 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர். இந்த சுகாதார நெருக்கடிக்கு முன்னாள் இடைக்கால அரசே காரணம் என பங்களாதேஷ் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அரசு வசமிருந்த தடுப்பூசி விநியோகத் திட்டத்தை தனியார் துறைக்கு மாற்ற இடைக்கால அரசு செய்த சதியே தடுப்பூசி விநியோகத் தட்டுப்பாட்டுக்கு காரணம் எனக் கூறி பங்களாதேஷ் ஜனாதிபதி யூனுசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மனுவில் விசாரணை முடியும் வரை முகமது யூனுஸ் உள்ளிட்ட இடைக்கால அரசின் முக்கிய புள்ளிகள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
