ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய இடைக்கால நிர்வாக குழுவின் தலைவராக எரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், ரொஷான் மஹாநாம , குமார் சங்கக்கார, துஷிர ரதல்ல, சிதத் வெட்டிமுனி,ஈ அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாப்டர், உப்புல் குமாரப்பெரும, தினால் பிலிப்ஸ் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கும், அதன் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்குமாக குறித்த இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
