திறைசேரியின் 25 இலட்சம் டொலர் திருடப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்தார்.
உயிர்மாய்த்த அதிகாரி நிதி அமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராவார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் இவரும் ஒருவராவார்.
குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டியில் உள்ள தனது வீட்டிலேயே அந்த அதிகாரி தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இவரின் உயிர் மாய்ப்பு தொடர்பில் பல்வேறுபட்ட கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
