தேனிசை செல்லப்பாவுக்கு யாழில் அஞ்சலி!

Audience seated in a bright hall decorated with red and yellow flags for a community event; a man with crutches sits in the front left.

Audience of men and women seated in a bright hall, listening to a presentation.

அண்மையில் மறைந்த புரட்சிப்பாடகர் தேனிசை செல்லப்பாவின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்த நினைவு வணக்க நிகழ்வு போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வில் பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் திருவுருப்படத்துக்கு மாவீரரின் தந்தை ஒருவர் பொதுச் சுடர் ஏற்றினார். மதத் தலைவர்கள் மலர்மாலை சூட்டினர். தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் தேனிசை செல்லப்பாவின் நினைவாக கவிஞர் மா. ஜெகனின் எழுதி, விமல் இசையமைத்து கேதீஸ்வரன் பாடிய பாடலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles