கறிவேப்பிலை பறிக்க மரத்திலேறிய முதியவர் தவறிவிழுந்து பலி!

கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை – நாச்சிமார் கோவிலடியில் நேற்று – மே முதலாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இராசதுரை பகவான்தாஸ் – வயது -64 என்பவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியபோது தவறி விழுந்து மயக்கமடைந்தார். இதனை அவதானித்தவர்கள் அவரின் வீட்டாருக்கு தெரியப்படுத்தினர்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்தபோதிலும் அவர் உயிரிழந்தார். மரண விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles