போர் நிறுத்தம் நடைமுறையிலுள்ளபோதிலும் தெற்கு லெபனான் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் முன்னெடுக்கிறது என்று அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. எனினும், போர் நிறுத்தத்தை இஸ்ரேல் படைகளும் ஹிஸ்புல்லா அமைப்பும் மீறுகின்றன என்று பரஸ்பரம் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் காகைத் அல் ஜிஸ்ர், அட்சித் அல் ஷாகிப், ஜெப்சிட், எப்பா, கபர் ஜோஷ், ஹரூப், அல் துவைர், டெய்ர் எஸ் சஹ்ரானி, ஹபூஸ் ஆகிய பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இதனிடையே, ஹபூஸ் நகரம் மீது இஸ்ரேல் நேற்று – மே முதலாம் திகதி நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று லெபனான் அறிவித்துள்ளது.
