செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 6ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாண நீதிவான் நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இன்றைய அகழ்வில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்டத்தில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட மூன்று மனித எலும்புக்கூடுகள், இன்றைய தினம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக நடைபெற்ற கட்டம் ஒன்று மற்றும் இரண்டுடன் சேர்த்து, இதுவரை முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்டத்திலும் சேர்த்து, செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தமாக 245 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதில், புதைகுழி அகழ்வு பிரதேசம் ஒன்று பகுதியில் 234 எலும்புக்கூடுகளும், பிரதேசம் இரண்டு பகுதியில் 9 எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வுப் பணிகளில் தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரும், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவும் ஈடுபட்டிருந்தனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles