கடலுக்கடியில் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி – புதிய கின்னஸ் சாதனை

Group of people celebrating outdoors as they hold a framed certificate together. Silhouettes of raised hands surround them on a sunny day.

அந்தமான் – நிகோபார் தீவுகளின் கடற்கரையின் நீருக்கடியில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

அந்தமான் – நிகோபார் தீவுகளின் சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து பறைசாற்றும்வகையில், ஸ்வராஜ் தீவிலுள்ள ராதாநகர் கடற்கரையில் கின்ன உலக சாதனை படைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, அந்தமான் – நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் ஜோஷி தலைமையில், இந்திய கடற்படை, கடலோர காவற்படை, வனத்துறை உள்பட பல்வேறு அரசுத்துறையினர் மற்றும் ஸ்கூபா பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் என 220இற்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 197 அடி நீளமும் 131 அடி அகலமும் கொண்ட இந்திய தேசியக் கொடியை நீருக்கடியில் விரித்து, புதிய சாதனை படைத்தனர்.

இந்தச் சாதனையை முறைப்படி அங்கீகரித்து, கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நடுவர் ரிஷிநாத், அந்தமான் – நிகோபார் நிர்வாகத்திடம் சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles