‘கம்பன் புகழ்’ விருது பெற்றார் ஜனாதிபதி அநுர

Three men in white traditional outfits with ceremonial ribbons stand on a decorated stage at a temple ceremony, smiling for the camera under colorful, ornate backdrop.

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான ‘கம்பன் புகழ்’ விருதினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கி கௌரவித்தனர்.

இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று, சிறுபான்மைச் சமூகங்களையும் ஆதரித்து, நாட்டை நிர்வகித்து வரும் அநுர குமார திசாநாயக்கவைப் பாராட்டும் வகையில் அவருக்கு இந்த கௌரவத்தினை கம்பன் கழகத்தினர் அளித்துள்ளனர்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா – 2026இன் இறுதி நாள் வைபவம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வினை தொழிலதிபர் என்.எஸ்.வாசு மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது நீதியரசர் பா.சசி மகேந்திரன் தலைமையுரையையும் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த டாக்டர் முஹமட் ரேலா தொடக்கவுரையும் ஆற்றினர்.

இந்நிகழ்வில் கம்பன் கழகம் ஆறு சான்றோர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி.தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி.உருத்திரலிங்கம், சுற்றுலா அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்திய கலாநிதி ‘காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முல்லைத்தீவு அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சான்றோர் விருது பெறவேண்டிய முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய நிகழ்வுக்கு வருகை தராததால் அவருக்கான விருதை. அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான நவீன் திசாநாயக்க விழா மேடையில் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் உயரிய விருதான ‘கம்பன் புகழ்’ விருதினை இவ்வாண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ‘வரலாற்றை மாற்றியவன்!’ என்ற புகழாரத்தோடு கழகத்தினர் வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தின் முன்னாள் தலைவர் கு.அண்ணாமலையும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை கம்பன் கழகம் வழங்கிய ‘கம்பன் புகழ்’ விருதினைத் தான் பெற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உரையாற்றத் தொடங்கிய ஜனாதிபதி ‘வணக்கம்’ என்று தமிழ் மக்களை நோக்கி தமிழில் தெரிவித்தபோது அரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பப்பட்டது. தொடர்ந்து அவர் தனது தாய் மொழியில் உரையாற்றினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles