மத்திய கிழக்கு மோதல்கள் இருந்தபோதிலும் மலேசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதுகாப்பாக உள்ளது என்றும், ஆனால் அதிகரித்து வரும் உலகளாவிய விலை அரசாங்கத்தின் நிதிநிலைக்குத் தொடர்ந்து அழுத்தத்தை அளிக்கின்றன என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஈரான், ரஷ்யா, துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பல முக்கிய நாடுகளுடனான தனது தூதரக உறவுகள் மூலம் விநியோகம் குறித்த உறுதிமொழிகளை மலேசியா பெற்றுள்ளது என்று அன்வார் கூறினார்.
இருப்பினும், அதிக சரக்குக் கட்டணம், காப்பீட்டுச் செலவுகள், கப்பல்கள் மற்றும் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக விலைகள் உயர்ந்து வருவதாக நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்!
