கனடாவின் அடுத் ஆளுநர் யார்? பிரதமர் கார்னி இன்று அறிவிப்பு

கனடாவின் அடுத்த ஆளுநர் நாயகம் யார் என்பது குறித்த அறிவிப்பை பிரதமர் மார்க் கார்னி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஆளுநர் நாயகம் மேரி சைமனின் பதவிக்காலம் இந்த கோடையில் முடிவடைவதை முன்னிட்டு புதிய நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

2021 ஜூலை மாதம் பதவியேற்ற மேரி சைமன், கனடாவின் ஆளுநர் நாயகம் பொறுப்பை ஏற்ற முதல் பழங்குடியின நபர் என்ற பெருமைக்குரியவர்.

மேரி சைமன் அவர்கள் ஆங்கிலம் மற்றும் பழங்குடியின மொழியான இனுக்கிடுட் ஆகியவற்றுடன் சரளமாகப் பேசக்கூடியவர்.

இருப்பினும், அவருக்கு பிரெஞ்சு மொழி தெரியாதமை விமர்சனங்களுக்கு உள்ளானது. அடுத்த ஆளுநர் நாயகம் கண்டிப்பாக கனடாவின் இரு அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு இரண்டிலும் புலமை பெற்றவராக இருப்பார் என்று பிரதமர் கார்னி உறுதி அளித்துள்ளார்.

ஆளுநர் நாயகமாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, மேரி சைமன் ஒரு சிறந்த இராஜதந்திரியாகவும், சமூகத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்

1952இல் வின்சென்ட் மாஸ்ஸி முதல் முறையாக பிரதமரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து இன்றுவரை நியமிக்கப்பட்ட அனைத்து ஆளுநர் நாயகங்களும் இருமொழிப் புலமை பெற்றவர்களாகவே இருந்து வந்துள்ளனர். மேரி சைமன் மட்டுமே இதில் விதிவிலக்காக இருந்தார். புதிய ஆளுநர் நாயகம் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்று மாலைக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles