ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 7 அதிவேக படகுகள் அழிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் மூழ்கடித்துள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுமார் 2,000 கப்பல்கள் மற்றும் 20,000 மாலுமிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

இவர்களை மீட்க அமெரிக்கா ஆரம்பித்துள்ள ‘புரொஜெக்ட் ஃப்ரீடம்’ என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்கக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்று, அமெரிக்க இராணுவப் பாதுகாப்போடு நீரிணையை கடந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளது.

ஈரானின் 7 அதிவேகப் படகுகளை நாங்கள் அழித்துவிட்டோம். மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு யாராவது தடையோ அல்லது இடையூறோ விளைவித்தால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்,’ என ட்ரம்ப், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles