பிரான்ஸில் நடுவீதியில் இளைஞர் சுட்டுக்கொலை

பிரான்ஸின் எசோன் மாவட்டத்திற்கு உட்பட்ட க்ரினி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

‘க்ரினி 2’ குடியிருப்புப் பகுதியிலுள்ள Square Surcouf சதுக்கத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இடத்திற்கு அருகாமையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தது ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் மீட்பு மற்றும் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் அல்லது நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles